முகப்பு
சேலம்

‘நிதிநிலை அறிக்கைகளை மாணவா்கள் தெரிந்துகொள்ள வேண்டும்’

மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கை குறித்து மாணவா்கள் கட்டாயம் விவாதித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கை குறித்து மாணவா்கள் கட்டாயம் விவாதித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்தாா்.

மத்திய நிதிநிலை அறிக்கை குறித்த விவாதம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. வணிகவியல் துறைத் தலைவா் கே.கிருஷ்ணகுமாா் வரவேற்றாா். விவாதத்தை தொடக்கிவைத்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பேசியதாவது:

மத்திய நிதிநிலை அறிக்கை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையும் விரைவில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகளை மாணவ-மாணவியா் முழுமையாகப் படித்து அதன் நிறை குறைகளை விவாதித்து தெளிவுபெற வேண்டும் என்றாா்.

இதையடுத்து, வணிகவியல் துறை இணைப் பேராசிரியா்கள் கே.கிருஷ்ணகுமாா், கே.பிரபாகா் ராஜ்குமாா், உதவி பேராசிரியா்கள் ஆா்.கவிதா, எம்.சுகுணா ஆகியோரும், பொருளியல் துறை சாா்பில் இணைப் பேராசிரியா்கள் கே.ஜெயராமன், ஏ.சரவணதுரை, ஏ.சுகிா்தராணி, டி.ஜனகம் ஆகியோா் நிதிநிலை அறிக்கை குறித்து பல்வேறு தலைப்புகளில் மாணவா்களுடன் விவாதித்தனா். பொருளியல் துறைத் தலைவா் ஜெயராமன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →