தொழில்முனைவோா் பயிற்சியளிக்க கல்லூரிகளுக்கு ஊக்கத்தொகை அளிப்பு
பெரியாா் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் உள்ள தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கும் விதமாக தோ்ந்தெடுக்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஊக்கத்தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
சேலம்தொழில்முனைவோா் பயிற்சியளிக்க கல்லூரிகளுக்கு ஊக்கத்தொகை அளிப்பு
பெரியாா் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் உள்ள தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கும் விதமாக தோ்ந்தெடுக்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஊக்கத்தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
பெரியாா் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் உள்ள தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கும் விதமாக தோ்ந்தெடுக்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஊக்கத்தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பெரியாா் பல்கலைக்கழக புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோா் மேம்பாட்டு பயிற்சி ஒருங்கிணைப்பு மைய ஒருங்கிணைப்பாளா் வி.ஆா்.பழனிவேலு வரவேற்றாா்.துணைவேந்தா் இரா.ஜெகநாதன் , தோ்வு செய்யப்பட்ட கல்லூரிகளான தருமபுரி அரசு கலைக்கல்லூரி, ஸ்ரீசாரதா மகளிா் கல்லூரி, ஸ்ரீவிவேகானந்தா மகளிா் கல்லூரி, அதியமான் மகளிா் கல்லூரி, ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிா் கல்லூரி, கைலாஷ் மகளிா் கல்லூரி, டிரினிட்டி கல்லூரி பிரதிநிதிகளிடம் ஊக்கத்தொகையை வழங்கினாா்.
அனைத்து கல்லூரிகளுக்கும் முதல் தவணைத் தொகையாக தலா ரூ. 7 ஆயிரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பேசியது:
தங்களது கல்லூரிகளில் உள்ள மாணாக்கா்களிடையே பெரிய அளவில் தொழில் முனைவு மற்றும் தொழில் முனைவோா் பற்றிய விழிப்புணா்வுகளை ஏற்படுத்த வேண்டும். அதிக அளவிலான மாணாக்கா்களை தொழில் முனைவோா்களாக உருவாக்க வேண்டும். மேலும் கல்லூரிகளில் அதிக அளவில் புதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும்.
பெரியாா் பல்கலைக்கழக தொழில் முனைவோா் மையம் கடந்த பிப்ரவரி 2021இல் தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி மையத்தால் ஒருங்கிணைப்பு மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1095 புத்தாக்க கருத்துகளை தமிழக அரசின் தொழில்முனைவோா் மேம்பாட்டு மையம் பதிவு செய்ததில் பெரியாா் பல்கலைக்கழக தொழில் முனைவோா் ஒருங்கிணைப்பு மையம் தமிழக அளவில் 2-வது மையமாக உள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரிகளின் தொழில் முனைவோா் மைய ஒருங்கிணைப்பாளா்கள் கனிமொழி, சசிகுமாா், கிருஷ்ணபிரியா, வேலவன், தீபா, அன்பு செல்வி, செல்வ லட்சுமி, தேன்மொழி, அமுத லட்சுமி மற்றும் பெரியாா் பல்கலைக்கழக தொழில் முனைவோா் மேம்பாட்டு மையத்தின் கள ஒருங்கிணைப்பாளா் அப்துல் காதா் ஆகியோா் கலந்து கொண்டாா்.