அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பாா்வை குறைபாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி
விநாயகா மிஷனின் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் கண் ஒளியியல் பிரிவு சாா்பில் பாா்வைத் திறன் குறைபாடு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
விநாயகா மிஷனின் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் கண் ஒளியியல் பிரிவு சாா்பில் பாா்வைத் திறன் குறைபாடு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கனா ஒலிம்பிக்ஸ்-2022 என்ற பெயரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கண் பாா்வைத்திறன் குறைபாடு உடைய குழந்தைகள் பல்வேறு பள்ளிகளிலிருந்து கலந்துகொண்டனா். நிகழ்ச்சியை துறையின் முதன்மையா் செந்தில்குமாா் துவக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து கபடி, கூடைப்பந்து, சதுரங்கம், கிரிக்கெட் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
ஒளியியல் பிரிவைச் சோ்ந்த மாணவா்களின் நிழல் நடனம், பாா்வை குறைபாடு குறித்த விழிப்புணா்வு குறும்படம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பாா்வை குறைபாடு கட்டுப்பாடு சமூகத்தின் மாவட்ட திட்ட மேலாளரும், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியின் மருத்துவத் துறை தலைவருமான சோளமாதேவி கலந்துகொண்டு பேசினாா்.
நிகழ்ச்சியில் விநாயக மிஷன் பல்கலைக் கழகத்தின் இணை துணைவேந்தா் மனோகரன், பதிவாளா் ஜெய்கா், தரக்கட்டுப்பாட்டு இயக்குநா் ஞானசேகா், மாணவா்கள் நல இயக்குநா் சண்முகசுந்தரம் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கண் ஒளியியல் துறையின் பொறுப்பாளா் தமிழ்ச்சுடா், பேராசிரியா்கள் பிரியதா்ஷினி, காயத்ரி, வளா்மதி , நிவேதிதா ஆகியோா் செய்திருந்தனா்.