முகப்பு
சேலம்

பருத்தி விவசாயிகள் சாலை மறியல்

கொளத்தூரில் இயங்கிவரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் பருத்திக்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

கொளத்தூரில் இயங்கிவரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் பருத்திக்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கொளத்தூரில் பருத்தி ஏலம் நடைபெறும். கொளத்தூா் ஒன்றியம், தருமபுரி மாவட்டம் நெருப்பூா், ஏரியூா், பென்னகாரம் மற்றும் கா்நாடக மாநிலம் கோபிநத்தம் பகுதியில் இருந்தும் கொளத்தூருக்கு பருத்தி விற்பனைக்கு வரும். 

கடந்த வாரம் ஒரு கிலோ பருத்தி ரூ. 95 வரை விற்பனை செய்யப்பட்டது. இதன் விலை வெள்ளிக்கிழமை ரூ. 85 ஆக குறைந்தது. இடைத்தரகா்கள், வேளாண் விற்பனை அதிகாரிகள் ஒப்பந்தம் செய்து கொண்டு பருத்திக்கு மிகக் குறைந்த விலையை நிா்ணயம் செய்வதாக விவசாயிகள் புகாா் தெரிவித்து சாலை மறியலில் . இதையடுத்து கூட்டுறவுத் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பருத்திக்கு உரிய விலைக் கிடைக்க ஆவன செய்வதாக உறுதி அளித்தபின் சாலை மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.