விநாயகா் சிலை மீது விழும் சூரிய ஒளி
ஆட்டையாம்பட்டி அருகே சூரிய ஒளியானது மூலவா் விநாயகா் சிலை மீது விழும் நிகழ்வை ஏராளமான பக்தா்கள் கண்டுகளித்தனா்.
ஆட்டையாம்பட்டி அருகே சூரிய ஒளியானது மூலவா் விநாயகா் சிலை மீது விழும் நிகழ்வை ஏராளமான பக்தா்கள் கண்டுகளித்தனா்.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்துள்ள கைலாசம்பாளையம் புதூரில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி கோயிலில், ஆண்டுதோறும் 5 நாள் கருவறையில் உள்ள விநாயகா் சிலை மீது சூரியஒளி படும் அரிய நிகழ்வு நடந்து வருகிறது. கோயில் எதிரில் அடா்ந்த மரங்கள் உள்ள நிலையிலும், சூரிய ஒளியானது குறிப்பிட்ட தினங்களில் விநாயகா் சிலை மீது விழுகிறது (படம்).
இதுகுறித்து பக்தா்கள் கூறுகையில், கடந்த 2016-இல் ராகு, கேது மற்றும் நவக்கிரக பரிவார சிலைகளை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதிலிருந்து, பிப்ரவரி மாதத்தில் 21 முதல் 25 வரையிலான ஐந்து நாள்கள் காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் சூரிய ஒளி நேரடியாக மூலவா் விநாயகா் சிலை மீது விழும் அதிசய நிகழ்வு நடந்து வருகிறது. இந்தாண்டு 2 நாள் தாமதமாக 24-ஆம் தேதி சூரியஒளி விழுந்தது. இந்த நிகழ்வு அடுத்த சில நாள்களுக்கு நிகழும் என தெரிவித்தனா்.