மேட்டூர் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய பேரூராட்சி நிர்வாகம்
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பேரூராட்சி 19-வது வார்டில் பாஜகவின் கொடிக் கம்பத்தை அகற்றியதைக் கண்டித்து சேலம் மேற்கு மாவட்ட பாஜக மற்றும் அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர்
சேலம்மேட்டூர் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய பேரூராட்சி நிர்வாகம்
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பேரூராட்சி 19-வது வார்டில் பாஜகவின் கொடிக் கம்பத்தை அகற்றியதைக் கண்டித்து சேலம் மேற்கு மாவட்ட பாஜக மற்றும் அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர்
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பேரூராட்சி 19-வது வார்டில் பாஜகவின் கொடிக் கம்பத்தை அகற்றியதைக் கண்டித்து சேலம் மேற்கு மாவட்ட பாஜக மற்றும் அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பாஜகவின் கொடிக் கம்பத்தை அனுமதியின்றி ஜலகண்டாபுரம் 19-வதுவார்டில் உள்ள அண்ணா பூங்கா அருகே நட்டனர். அனுமதியின்றி நடப்பட்டதால் ஜலகண்டாபுரம் பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது.
இன்று பாஜக சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன் தலைமையில் பாஜக மற்றும் அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜலகண்டாபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பேரில் பாஜக கொடிக் கம்பத்தை அகற்றியதாக குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஜலகண்டாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரிடம் பாஜகவினர் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பிரிவினர் கொடிக்கம்பம் அகற்றப்பட்ட இடத்திற்கு திடீரென வந்தனர். அங்கிருந்த ஓமலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா மற்றும் போலீசார் பாஜகவினர் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாருக்கும் பாஜகவினர் க்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்தலைமையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். கூடுதல் போலீசார் வந்தவுடன் அங்கிருந்த பாஜகவினர் மற்றும் அதிமுகவினரை அப்புறப்படுத்தினார்கள்.