முகப்பு
சேலம்

கெங்கவல்லி: அதிக மாணவர்களை சேர்ந்த பள்ளிகளுக்கு பீரோக்கள் பரிசு

கெங்கவல்லி ஒன்றியத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களஐ  சேர்த்த முதல் 6 பள்ளிகளுக்கு 6 பீரோக்கள், 25 பள்ளிகளுக்கு புத்தகங்களை ரோட்டரி சங்கம்  வழங்கி பாராட்டியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
கெங்கவல்லி ஒன்றியத்தில் பள்ளிகளுக்கு பீரோக்கள், புத்தகங்கள் வழங்கிய ரோட்டரி கல்விக்குழுத் தலைவர் வெங்கடேஸ்வர குப்தா .
பகிர்:

தம்மம்பட்டி: கெங்கவல்லி ஒன்றியத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை  சேர்த்த முதல் 6 பள்ளிகளுக்கு 6 பீரோக்கள், 25 பள்ளிகளுக்கு புத்தகங்களை ரோட்டரி சங்கம்  வழங்கி பாராட்டியது.

சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ரோட்டரி மாவட்ட கல்விக்குழு (2982) இணைந்து, கெங்கவல்லி ஒன்றியத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அதிஅதிக மாணவர்களை சேர்த்த முதல் ஆறு பள்ளிகளுக்கு,தலா ஒரு பீரோ வீதம் ஆறு பீரோக்களும், கிராமப்புற பகுதி மாணவர்களது வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க 25 பள்ளிகளுக்கு 2,500 புத்தகங்களும் வழங்கும் விழா  கெங்கவல்லியில் 2வது வார்டு துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.

இதற்கு சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (டயட்) முதல்வர் செல்வம் தலைமை வகித்தார். கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலர்கள் ர.ஸ்ரீனிவாஸ், இ.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டயட் விரிவுரையாளர் கலைவாணன் வரவேற்றார். சேலம்,நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஆறு ரோட்டரி மாவட்டங்களின் கல்விக்குழு தலைவர் வெங்கடேஸ்வர குப்தா, தம்மம்பட்டி மெயின், நாகியம்பட்டி, தண்ணீர்தொட்டி ஆகிய நடுநிலைப்பள்ளிக்கும், கெங்கவல்லி, கோனேரிப்பட்டியிலுள்ள ஆர்.சிசி. பள்ளிகள், தெடாவூர் மேற்கு தொடக்கப்பள்ளி ஆகிய 6 பள்ளிகளுக்கு  பீரோக்கள், புத்தகங்களையும் மேலும் 25 பள்ளிகளுக்கு புத்தகங்களும் வழங்கி, வாழ்த்தி பேசினார்.

இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சின்னசேலம் பிரியா வெங்கடேசன், மண்டல தலைவர் கெங்கவல்லி இளவரசன், ரோட்டரி திறன் மேம்பாட்டு தலைவர் அய்யப்பராஜ், கருணாகர பன்னீர்செல்வம்,  மிட் டவுண் ரோட்டரி தலைவர் சுரேஷ்குமார், ஆத்தூர் மற்றும் தலைவாசல் ரோட்டரி சங்க தலைவர்கள் குமார், ஆதிமூலம் ஆகியோர் பேசினர். சேலம் டயட் நூலகர் சச்சிதானந்தம் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர்கள் அன்பழகன், ராமகிருஷ்ணன், ஹரி ஆனந்த், ஆசிரியர்கள் முருகன், சுப்ரமணியன், கமலக்கண்ணன், இராஜசேகர், பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது குறித்து சேலம், நாமக்கல், தர்மபுரி உள்பட 6  மாவட்டங்களுக்கான ரோட்டரி  கல்விக் குழு தலைவர் வெங்கடேஸ்வர குப்தா கூறியதாவது: வாசிக்க, நேசிக்க, சுவாசிக்க ரோட்டரி நூலகங்கள் பள்ளிகளில் அமைத்து, கல்லாமை இல்லாமையாக்க வேண்டும். அடுத்த முறை அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் டிவிக்கள் வழங்க உள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.