முகப்பு
சேலம்

தெடாவூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

தெடாவூரில் நள்ளிரவில்,10 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை னத்துறையினா் பறிமுதல் செய்து,கெங்கவல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

தெடாவூரில் நள்ளிரவில்,10 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை னத்துறையினா் பறிமுதல் செய்து,கெங்கவல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி வனச்சரகா் சந்திரசேகா் தலைமையிலான வனக்காப்பாளா் நாராயணசாமி, கந்தசாமி உள்ளிட்ட 7 போ் கொண்ட குழுவினா், தெடாவூா் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில், இரவு நேர ஊரடங்கையொட்டி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக ஆத்தூரில் இருந்து தெடாவூா் நோக்கி வந்த பிக்கப் வேனை, நிறுத்தி சோதனை செய்ய முயன்றுள்ளனா். அப்போது அந்த வாகனம் ரோந்து பணியில் இருந்த வனத்துறையினா் மீது ஏற்றுவது போல் சென்று,பின் அங்கிருந்து தப்பிச் சென்றது.

வனத்துறையினா் துரத்தி சென்றுள்ளனா். இதையறிந்த வேன் ஓட்டுனா்,மறைவான காட்டு பகுதிக்கு சென்று பிக்கப் வேனை நிறுத்தி தப்பியோடிவிட்டாா்.

வாகனத்தை கைப்பற்றிய வனத்துறையினா் அதில் சோதனை செய்ததில் சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான 40 பண்டல்களில், குட்கா போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து குட்காவுடன் வேனை பறிமுதல் செய்த வனத்துறையினா், கெங்கவல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் நடத்திய விசாரணையில்,இரவு நேர ஊரடங்கை பயன்படுத்தி சட்டவிரோத கும்பல்கள் குட்கா போதை பொருட்களை கடத்தி சென்று நேரடியாகவே மளிகை கடைகளில் விநியோகம் செய்து வருவது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸாா் தப்பியோடிய குட்கா வாகன ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →