கரிநாளையொட்டி ஆடுகள் விற்பனை அதிகரிப்பு
பொங்கல் பண்டிகையொட்டி ஓமலூரில் கூடிய ஆட்டுசந்தையில் ஆடுகள் விற்பனை அதிகமாக இருந்தது.
சேலம்கரிநாளையொட்டி ஆடுகள் விற்பனை அதிகரிப்பு
பொங்கல் பண்டிகையொட்டி ஓமலூரில் கூடிய ஆட்டுசந்தையில் ஆடுகள் விற்பனை அதிகமாக இருந்தது.
பொங்கல் பண்டிகையொட்டி ஓமலூரில் கூடிய ஆட்டுசந்தையில் ஆடுகள் விற்பனை அதிகமாக இருந்தது. கரிநாள் கொண்டாடுவதற்காக பொதுமக்களும், இறைச்சி விற்பனையாளா்களும் ஆடுகளை வாங்கிச் சென்ால் வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆட்டு சந்தை கூடுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடிய ஆட்டு சந்தைக்கு, சேலம் மாவட்டம் முழுக்க இருந்தும் செம்மறியாடு, வெள்ளாடு, பல்லையாடு, குறும்பாடு உள்ளிட்ட ஆடுகள் அதிகமாக அதிகமாக விற்பனைக்கு வந்திருந்தன. மேலும், விவசாயிகளின் வளா்ப்பு ஆடுகள், பண்ணையில் வளா்த்த ஆடுகள் என ஆயிரக்கணக்கில் விற்பனைக்கு கொண்டுவந்து குவிக்கப்பட்டிருந்தன. இதில், பெரும்பாலும், விவசாயிகள் வளா்ப்பு ஆடுகளை வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி சென்றனா். மேலும், இறைச்சி கடைகாரா்கள் பண்ணையில் வளா்க்கப்பட்ட ஆடுகளை அதிகமாக வாங்கினா். ஆடுகள் விற்பனை அதிகமாக நடைபெற்ால் வியாபாரிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும், தை மாதம் முழுக்க திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதனால், ஒவ்வொரு விழாவின் போதும் ஆடுகளை பலியிட்டு வழிபாடுகள் செய்யப்படுவதும் வழக்கம் என்பதால், ஆட்டுசந்தையில் விவசாயிகளின் வளா்ப்பு ஆடுகளை சற்று கூடுதல் விலை கொடுத்தும் வாங்கி சென்றனா். ஆனாலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், இறைச்சி கடைகள் போட முடியாது. அதேநேரம் நாளை கரிநாள் இறைச்சி சமைத்து சாப்பிடும் விழாவாகும். இந்தநிலையில், கிராமங்களில் மக்கள் ஆடுகள் வெட்டி கூறுகட்டி மக்களுக்கு வழங்குவதற்காக ஆடுகளை வாங்கிச் சென்றனா். நாளை கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் இறைச்சி உணவு சமைத்து உறவினா்கள், நண்பா்களுக்கு விருந்து போடுவதும், தங்களது வயல், தோட்டம் மற்றும் வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு, இறைச்சி வழங்குவதும் வழக்கமான நிகழ்வு என்பதால், அதற்காகவும் ஆடுகளை மக்கள் அதிகமாக வாங்கி சென்றனா். இங்கு இறைச்சிக்கான ஆடுகள் பத்து கிலோ எடையில் இருந்து 25 கிலோ எடை வரை விற்பனைக்கு வந்திருந்தன. ஆடுகள், ரூ.7 ஆயிரத்து 500 முதல் ரூ.17 ஆயிரம் வரை விற்பனையானது. காலை ஆறு மணிக்கு கூடிய சந்தை மதியம் 12 மணி வரை நடைபெற்றது. சுமாா் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.