வாழப்பாடி இலக்கியப் பேரவை திருவள்ளுவர் தின விழாவில் 4 புதிய நுால்களை வெளியிட்ட தமிழ் ஆர்வலர்கள். 
சேலம்

வாழப்பாடியில் திருவள்ளுவர் தின விழா: நுால்கள் வெளியீடு

சேலம் மாவட்டம் வாழப்பாடி இலக்கியப் பேரவை சார்பில், 26-ம் ஆண்டு திருவள்ளுவர் தின விழா மற்றும் நுால்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

DIN


சேலம் மாவட்டம் வாழப்பாடி இலக்கியப் பேரவை சார்பில், 26-ம் ஆண்டு திருவள்ளுவர் தின விழா மற்றும் நுால்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

வாழப்பாடி இலக்கியப் பேரவை சார்பில், தொடர்ந்து 25 ஆண்டுகளாக பொங்கல் விழாவோடு இணைந்து, திருவள்ளுவர் தின விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 
 
வாழப்பாடி வட்டார  வேளாண்மை ஆத்மாக் குழு தலைவர் சி.செ. சக்கரவர்த்தி தலைமையில், ராஜன் அச்சகத்தில் இருந்து மேள வாத்தியம் முழங்க ஊர்வலமாக சென்ற இலக்கியப் பேரவை மற்றும் உலகத் தமிழ்க் கழக தமிழ் ஆர்வலர்கள், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 26-வது திருவள்ளுவர் தின விழாவிற்கு, இலக்கியப் பேரவைத் தலைவர் இல. ராமசாமி தலைமை வகித்தார். 

தாளாளர் அ. செந்தில்குமார் வரவேற்றார். துணைத் தலைவர் மா. கணேசன் முன்னிலை வகித்தார். பொருளர் ஸ்ரீ முனிரத்தினம் ஆண்டறிக்கை வாசித்தார். செயலர். சிவ.எம்கோ, புதிய நுால்கள் மற்றும் நுாலாசிரியர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

இதனையடுத்து, கவிஞர். பெரியார் மன்னனின் விந்தை மனிதர்கள் இரண்டாம் தொகுதி, மதுரம் ராஜ்குமாரின் நெரிசலில் பட்டம், குறைவென்பது குற்றமல்ல மற்றும் விச்சு வினோவின் அதிவேகப் பயணம் ஆகிய 4 நுால்கள் வெளியிடப்பட்டன.

திருவள்ளுவருக்கு மலையணிவித்து மரியாதை செய்த இலக்கியப் பேரவை தமிழ் ஆர்வலர்கள்.

நுால்களை அரிமா சங்க பட்டயத் தலைவர் எம். சந்திரசேகரன் வெளியிட, சி.செ. சக்கரவர்த்தி, ஆசிரியர் கோ. முருகேசன், தொழிலதிபர் கே.பி. சண்முகம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலைஞர்புகழ், செயலர் குணாளன், பொருளர் ரமணி, தலைமையாசிரியர் ரவிசங்கர், ஊர்கவுண்டர் மூர்த்தி, ஆடிட்டர் குப்பமுத்து, சாய்பாபா அறக்கட்டளை ஜவஹர், கமலாலயம் ஆதிராஜன், ஆசிரியை புஷ்பா, முன்னாள் கவுன்சிலர்கள் குமார், கதிரவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக, பெரியார்மன்னன் நன்றி கூறினார்.

வாழப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலுள்ள திருவள்ளுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT