மேட்டூர் அணை நீர்வரத்து 978 கன அடியாக சரிவு
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 112.56அடியிலிருந்து 112.13அடியாக சரிந்தது.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 112.56அடியிலிருந்து 112.13அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 990கன அடியிலிருந்து 978 கன அடியாக சரிந்துள்ளது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 81.47 டி.எம்.சியாக இருந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 978 கன அடிக்கு கீழே சரிந்தது.