காவிரிக்கதவணை விசைப் படகில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள். 
சேலம்

எடப்பாடி அருகே காவிரிக் கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

எடப்பாடி அருகே காவிரிக் கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

DIN

எடப்பாடி அருகே காவிரிக் கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
தமிழக அரசின் கரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடு மற்றும் தளர்வுகளற்ற முழு பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணங்களால் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதி நேற்று மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 
இந்நிலையில் இன்று காலை முதல் பூலாம்பட்டி கைலாசநாதர் திருக்கோயில், காவிரிக் கரையில் உள்ள பிரம்மாண்ட நந்திகேஸ்வரர் ஆலயம், காவிரி படித்துறை மற்றும் படகுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வரத்து தொடங்கியுள்ளது. 

மேலும் காவிரிக்கதவணை நீர்த்தேக்க பரப்பில் சேலம்- ஈரோடு மாவட்ட எல்லைகளை இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், திங்களன்று காலை முதல் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் விசைப் படகு பயணம் மேற்கொண்டு அண்டை மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர். 

மீண்டும் காவிரிக்கதவணை பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதி வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதவோரக் கவிதை... அம்மு அபிராமி!

பாலஸ்தீன மூத்த அதிகாரிகள் கொல்லப்பட வேண்டும்: இஸ்ரேல் அமைச்சர் சர்ச்சைப் பேச்சு!

ஜீன்ஸ்... ஜீன்ஸ்... சோபிதா துலிபாலா!

வெளிச்சப் பூவே... ஸ்ரீதேவி அசோக்!

கார்த்திகை மாதப் பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT