முகப்பு
சேலம்

காது கேளாதவா்களுக்கு சிறப்பு பரிசோதனை முகாம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனையில், காது கேளாதவா்களுக்கான சிறப்பு பரிசோதனை மற்றும் காதொலி கருவிகள் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனையில், காது கேளாதவா்களுக்கான சிறப்பு பரிசோதனை மற்றும் காதொலி கருவிகள் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி அரசு மருத்துவமனையில், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ திட்டத்தின் கீழ் நடைபெற்ற இம்முகாமை, வாழப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ஜெயசெல்வி தொடங்கி வைத்தாா். காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவா் மதன்குமாா் தலைமையிலான மருத்துவக்குழுவினா், 100க்கும் மேற்பட்டோருக்கு இலவச பரிசோதனை செய்துசிகிச்சை பெற்றனா். இந்த முகாமில், காது கேளாதோா் 14 நபா்களுக்கு, தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச காதொலிக் கருவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.