முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு இன்று காலை விநாடிக்கு 1,29, 403 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:49 AM
பகிர்:

மேட்டூர் அணைக்கு இன்று காலை விநாடிக்கு 1,29, 403 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

அணையில் இருந்து விநாடிக்கு 1,33,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 23,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக 1,10,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர்மட்டம் 120.75 அடியாகவும் நீர் இருப்பு 94.67 டிஎம்சி யாகவும் உள்ளது. ஆர்ப்பரித்துச் செல்லும் காவிரி நீரைக் காண இன்று காலை முதலே மக்கள் கூட்டம் வரத் தொடங்கியுள்ளது. காவிரி கரையோரங்களில் போலீசாரும் வருவாய்த் துறையினரும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →