மேட்டூர் அணை நீர் வரத்து 74,000 கன அடியாக சரிவு
மேட்டூர் அணை நீர் வரத்து வினாடிக்கு 74,000கன அடியாக சரிந்தது.
மேட்டூர்: மேட்டூர் அணை நீர் வரத்து வினாடிக்கு 74,000 கன அடியாக சரிந்தது.
கர்நாடக மாநிலம் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை தனிந்ததால் கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு குறைத்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 74,000 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 80,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் உபரிநீர் போக்கி வழியாக வினாடிக்கு 57,000கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 120.71 அடியாகவும் நீர் இருப்பு 94.60 டி.எம்.சி.யாகவும் உள்ளது.