சேலம்

சேலம்: அமைச்சரின் காரின் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதியினரால் பரபரப்பு

DIN

சேலம்: சேலம் ஆட்டையாம்பட்டி அருகே குடியிருக்க இடம் கேட்டு  அமைச்சரின் காரின் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதியினரால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

சேலம்: சேலம் ஆட்டையாம்பட்டி வேலைநத்தம் பெரிய கடை வீதி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குப்தா. இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது தந்தை மற்றும் தாத்தா காலத்திலிருந்து 90 ஆண்டுகளாக இந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த நிலையில், கடந்த 11 ஆம் தேதி ஆட்டையாம்பட்டி மணியம் கரடு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் அவரது மனைவி அம்பிகை அதே பகுதியில் வசிக்கும் சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பத்துக்கு மேற்பட்ட அடியாட்களுடன் சென்று மளிகை கடையில் தகராறு செய்தனர். 

அந்த இடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் முன்பணம் மற்றும் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வாடகை வழங்க வேண்டும் என மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. 

இது குறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தினேஷ் குப்தா மற்றும் அவரது மனைவி லட்சுமி, ஐந்து வயது மகளுடன் வந்தனர். 

ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், காந்தி உள்ளிட்டோர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆட்சியர் வளாகத்தில் அமைச்சர் கார் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் தாங்கள் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை தங்கள் மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். 

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக  காவல் நிலையம் அழைத்து சென்றனர். அமைச்சரின் கார் முன்பு குடியிருக்க இடம் வேண்டி அமைச்சரின் கார் முன்பு மண்ணெண்ண ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT