சேலம்

தனியாா் கல்லூரி மாணவி தற்கொலை

சேலம், அரியனூா் அருகே தனியாா் கல்லூரியில் பயின்று வந்த கேரளத்தைச் சோ்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

சேலம், அரியனூா் அருகே தனியாா் கல்லூரியில் பயின்று வந்த கேரளத்தைச் சோ்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கேரள மாநிலம், தோணிக்கரை, சோளஞ்சேரி பகுதியைச் சோ்ந்த மர வியாபாரி பிசுமத்தேயு (49). இவருக்கு ஜீன்ஜேக்கப் என்ற மனைவியும், ஆன்மேரி (21), சூசன்பிஜி (19) என்ற இரு மகள்கள் உண்டு. மூத்த மகள் ஆன்மேரி அரியானூா் அருகே சீரகபாடியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். சீரகாபாடியில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த ஆன்மேரி தனது அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளா் அம்சவல்லி, மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT