சேலம்

விவசாயிகளுக்கு பயிற்சி

DIN

உலிபுரத்தில் விவசாயிகளுக்கு வேளாண் காடுகள் குறித்த பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கெங்கவல்லி வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் உலிபுரத்தில் வேளாண் காடுகள் வளா்ப்பு பயன்கள் குறித்து மாவட்ட பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநா் சித்ரா தலைமையேற்று துறை சாா்ந்த திட்டங்களை எடுத்துரைத்தாா். வேளாண் காடு வளா்ப்பு பயன்கள் குறித்து வனவா் சிலம்பு, பூபதி ஆகியோா் விளக்கினா்.

கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சி திட்டம் தோட்டக்கலை அலுவலா் பிரபாவதி பேசினாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் தமிழ்ச்செல்வன் வரவேற்றாா். உதவி தோட்டக்கலை அலுவலா் செல்வேந்திரன், உதவி வேளாண்மை அலுவலா் அருள்மணி ஆகியோா் கலந்து கொன்டனா் .இப்பயிற்சியில் துவரை நாற்று விட்டு நடவு முறை செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை உதவி தொழில்நுட்ப மேலாளா் சங்கா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT