முகப்பு
சேலம்

சங்ககிரியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கல்

சங்ககிரியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான காரத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு சான்றிதழ், கோப்பையை வழங்குகிறார் சங்ககிரி ரோட்டரி சங்கத்தலைவர் டி.ஹெலினாகிறிஸ்டோபர்.
பகிர்:

சங்ககிரியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன.

இண்டர் நேஷனல் கியோ குஷின் ரியோ கராத்தே கிளப் சங்ககிரி கிளை மற்றும் சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இண்டர் நேஷனல் கியோ குஷின் ரியோ கராத்தே கிளப் சங்ககிரி கிளையின் சார்பில் 8 வயது முதல் 20 வயதுவரை  உள்ள மாணவ, மாணவிகளுக்கு 20 எடை முதல் 50 எடை வரையிலான மாணவ, மாணவிகளுக்கு என தனிதனியாக போட்டிகள் நடைபெற்றது.

இதில் சங்ககிரி, சேலம், ஜலகண்புரம், மேச்சேரி, பள்ளிப்பாளையம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சிறுவர்களுக்கான ஆண்கள் பிரிவில் திருமலைவாசன் முதல் இடத்திலும், வைகுண்டமுத்து 2வது இடத்திலும், மோனிஷ்குமார் 3வது இடத்திலும் வெற்றி பெற்றனர்.   சிறுமிகளுக்கான பிரிவில் பிரியதர்ஷினி முதல் இடத்திலும், கான்ஷிகா 2வது இடத்திலும், கரில்னாஸ்ரீ 3வது இடத்திலும் வெற்றி பெற்றனர்.

முதியோர்களுக்கான பெண்கள் பிரிவில் நந்தினி முதல் இடத்திலும், இராஜேஸ்வரி 2வது இடத்திலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சங்ககிரி ரோட்டரி சங்கத்தலைவர் பொறியாளர் டி.ஹெலினாகிறிஸ்டோபர் தலைமை வகித்து சான்றிதழ்கள், கோப்பைகளை வழங்கினார். ரோட்டரி சங்கச் செயலர் என்.தியாகராஜன், பொருளாளர் கே.செந்தில்குமார், நிர்வாகிகள் ராமசாமி, திவாகர், கரோத்தே பயிற்சியாளர் அர்ஜூனன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →