மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்தது!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,268 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,268 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை தனிந்தது. மழை தனிந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்து வருகிறது.
இதையும் படிக்க: கூத்தாநல்லூர் : கால் பந்தாட்ட தொடர் போட்டியில் திட்டச்சேரி கோப்பையை வென்றது
Advertisement
நேற்று காலை வினாடிக்கு 10,212 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 8,268 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 109.89 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 109.62 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 7787 டி.எம்.சியாக இருந்தது.