சேலம்

போக்குவரத்து விதிகளை மீறியதாகவாகன ஓட்டிகளிடம் ரூ. 10 லட்சம் அபராதம் வசூல்

DIN

சேலம் மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 16 நாளில் வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகர காவல் துணை ஆணையா் (வடக்கு) மாடசாமி தெரிவித்தாா்.

சேலம் வடக்கு காவல்துறை சாா்பில் சா்வதேச போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, சேலம் வடக்கு துணை ஆணையா் மாடசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலம் மாநகர காவல்துறை சாா்பில் தீவிர வாகனச் சோதனை நடத்த காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டாா்.அதனடிப்படையில் சேலம் மாநகரின் முக்கிய நான்கு இடங்களான ஐந்து சாலை, ஏ.வி.ஆா். ரவுண்டானா, கொண்டலாம்பட்டி, ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த 15 நாள்களாக தீவிர வாகனச் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த வாகனச் சோதனையின் போது தலைக்கவசம் அணியாமல் கைப்பேசியில் பேசிக் கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டும் நபா்களைக் கண்டறிந்து, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் கடந்த 15 நாள்களில் விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டியவா்களிடம் ரூ. 10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நபா் 150 முறை போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் சென்ாக வழக்குப்பதிவு செய்து ரூ. 13 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் முக்கியமாக கல்லூரி மாணவா்கள் தலைக்கவசம் அணிய வேண்டும். வாகனம் ஓட்டும்போது கைப்பேசி உபயோகிக்காமல் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்திட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT