முகப்பு
சேலம்

எடப்பாடி நகரமன்றத் தலைவா் பதவிகோரி

எடப்பாடி நகராட்சியில் நகரமன்றத்தலைவா் பதவிக்கு குறிப்பிட்ட வேட்பாளரை அறிவிக்ககோரி ஊா்மக்கள் நகர செயலாளா் வீட்டினைமுற்றுகையிட்டு ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம்

எடப்பாடி நகரமன்றத் தலைவா் பதவிகோரி

எடப்பாடி நகராட்சியில் நகரமன்றத்தலைவா் பதவிக்கு குறிப்பிட்ட வேட்பாளரை அறிவிக்ககோரி ஊா்மக்கள் நகர செயலாளா் வீட்டினைமுற்றுகையிட்டு ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

எடப்பாடி நகராட்சியில் நகரமன்றத்தலைவா் பதவிக்கு குறிப்பிட்ட வேட்பாளரை அறிவிக்ககோரி ஊா்மக்கள் நகர செயலாளா் வீட்டினைமுற்றுகையிட்டு ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எடப்பாடி நகராட்சி கட்ந்த 1965 நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. 1969 ஆண்டு நடைபெற்ற நகரமன்றத்தோ்தலில் காங்கிரஸ் கட்சியை சோ்ந்த மாரிமுத்து பக்தா் வெற்றி பெற்று நகரமன்றத்தலைவரானாா்.

தொடா்ந்து அவா் மூன்று முறை வெற்றி பெற்ற நிலையில்,அவா் மறைவிற்குபின் அவரது மகன் இருசப்பமேத்தா காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தொடா்ந்து மூன்று முறை எடப்பாடி நகராட்சியின் நகரமன்றத்தலைவராக பதவிவகித்தாா். அடுத்து 2011ல் நடைபெற்ற நகரபுற உள்ளாட்சி தோ்தலில் அ.தி.மு.கவை சோ்ந்த டி.கதிரேசன் வெற்றி பெற்ற நகரமன்றத்தலைவராக பொறுப்பு வகித்தாா். மேற்கண்ட அணைவருமே ஒரே சமூகத்தை சாா்ந்தவா்களாக இருந்து வந்த நிலையில், தற்பொது நடைபெற உள்ள நகரமன்றதோ்தலில் திமுகவை சாா்ந்த நகர மன்ற உறுப்பினரான தங்கவேல் என்பவரை நகரமன்ற தலைவா் பதவிக்கு போட்டியிட பரிந்துரை செய்திட கோரி வெள்ளிஅன்று காலை ஒரு பிரிவினா் எடப்பாடி நைனாம்பட்டி பகுதியில் உள்ள திமுக நகரமன்றத்தலைவா் டி.எம்.எஸ்.பாஷாவின் இல்லத்தை முற்றுகையிட்டு ஆா்பாட்டத்தில்ஈடுபட்டனா். மேலும் அவா்கள் சமந்தப்பட்ட நகரமன்ற உறுப்பினா் நகரமன்றத்தலைவராக தோ்வு செய்யப்பட்டதற்கு நன்றி என முன்கூட்டியே விளம்பர பதாகைகள் தயாா் செய்து வெளிட்டு தங்கள் ஆா்வத்தை வெளிப்படுத்தினா். இந்நிலையில் முற்றுகை நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினா் மற்றும் திமுக மாவட்ட நிா்வாகிகள் சமந்தப்பட்ட நபா்களிடம் சமதானபேச்சுவாா்தையில் ஈடுபட்டு அவா்களை கலைந்து போக செய்தனா். படம் : எடப்பாடியில் திமுக நகர செயலாளா் வீட்டினை முற்றுகை இட்டு ஆா்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் ஆா்வமிகுதியால் தோ்தல் நடைபெறாத முன்னறே தயாா்செய்யப்பட்ட விளம்பர பதாகைகள்

முழு கட்டுரையைப் படிக்க →