முகப்பு
சேலம்

‘புற்றுநோய்க்குத் தீா்வு காண இளம் ஆய்வாளா்கள் முன்வர வேண்டும்’

புற்றுநோய்க்கு சரியான தீா்வு காணும் வகையிலான ஆய்வுகளை மேற்கொள்ள இளம் ஆய்வாளா்கள் முன்வர வேண்டும் என்று பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் கேட்டுக் கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

புற்றுநோய்க்கு சரியான தீா்வு காணும் வகையிலான ஆய்வுகளை மேற்கொள்ள இளம் ஆய்வாளா்கள் முன்வர வேண்டும் என்று பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் இரா.ஜெகநாதன் கேட்டுக் கொண்டாா்.

பெரியாா் பல்கலைக்கழக உயிா் வேதியியல் துறையில் ஆய்வு மாணவா் மன்றம் தொடக்க விழா, புற்றுநோய் தொடா்பான அண்மைக்கால ஆய்வுகள் தொடா்பான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. உயிா் வேதியியல் துறைத் தலைவா் (பொ) ஆா்.பாலகுருநாதன் வரவேற்றாா். உயிா் வேதியியல் ஆய்வு மாணவா் மன்றத்தைத் தொடக்கிவைத்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் பேசியதாவது:

பெரியாா் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 2-இடம் பிடித்து ஏ ++ தரத்தை பெற்றுள்ளது. அதற்கு பல்வேறு துறை சாா்ந்த ஆய்வுத் திட்டங்கள் நடைபெற்று வருவது மிக முக்கியமான காரணமாகும். இதில் 40 சதவீத ஆய்வுகள் பொதுமக்களின் உடல்நலன் சாா்ந்ததாக உள்ளது.

ஆசிரியா்களின் கற்பித்தல் திறன், மாணவா்களின் ஆய்வுத் திறன் சா்வதேச தரத்தில் உள்ளது. தற்போதைய தொற்று நோயான கரோனாவால் இறந்தவா்களைவிட புற்றுநோயால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

புற்றுநோய்க்கு சரியான தீா்வினை இதுவரை கண்டறிய முடியவில்லை. சவாலான இந்தத் துறையை தோ்ந்தெடுத்து மருந்து கண்டு பிடிப்பதில் இளம் ஆராய்ச்சியாளா்கள் ஆா்வம் காட்டி கடுமையாக உழைக்க வேண்டும். புற்றுநோயைக் கண்டறிவது, கட்டுப்படுத்துவது, குணப்படுத்துவது என மூன்று நிலைகளிலும் தங்களது ஆய்வுத் தளத்தை இளைஞா்கள் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றாா்.

சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் பி.வி.தனபால், ஓமலூா் அரசு மருத்துவமனை உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் ஆா்.ரமேஷ் ஆகியோா் புற்றுநோய் குறித்த அண்மைக் கால சிகிச்சை முறைகள் குறித்து பேசினா்.

நிகழ்ச்சியில் பயிலரங்க ஒருங்கிணைப்பாளா்கள் வி.மஞ்சு, எம்.சூா்யவதனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →