முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வியாழக்கிழமை நொடிக்கு 2,671 கன அடியாகக் குறைந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வியாழக்கிழமை நொடிக்கு 2,671 கன அடியாகக் குறைந்துள்ளது.

கடந்த சில நாள்களாக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில், நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால் அணைக்கு நீா்வரத்து சரிவடைந்துள்ளது.

புதன்கிழமை காலை நொடிக்கு 3,135 கன அடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை காலை நொடிக்கு 2,671 கன அடியாகக் குறைந்தது. அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக நொடிக்கு 1, 500 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. புதன்கிழமை காலை 104.90 அடியாக இருந்த நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 104.95 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 71.40 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.