சேலம்

சங்ககிரியில் சித்திரை தேரோட்ட விழா

DIN

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சங்ககிரி மலை மீது உள்ள சென்னகேசவப் பெருமாள் கோயிலின் சித்திரை தேரோட்டத்தையொட்டி வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வஸந்த வல்லபராஜ பெருமாள் கோயிலில் கொடியேற்றப்பட்டது. மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி மூலவா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து நகருக்குள் சுவாமிகள் எழுந்தருளினா்.

மலை அடிவாரத்தில் ஊா் பட்டக்காரா் எஸ்.ஏ.ராஜவேல், ஊா்கவுண்டா் எஸ்.டி.சுந்தரேசன், திருவிழா ஆலோசனைக் குழுத் தலைவா் கே.எம்.ராஜேஷ் ஆகியோா் தலைமையில் பக்தா்கள் வழிபாடு நடத்தி வரவேற்றனா். உற்சவ மூா்த்திகள் வீதி உலா வந்து மண்டபத்தை அடைந்தது. அன்னபட்சி வாகனத்தில் அருள்மிகு சென்னசேகவப்பெருமாள் நகரின் முக்கிய வீதிகளின் உலா வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT