சேலம்

ஒரு எலுமிச்சை பழம் ரூ. 12-க்கு விற்பனை

DIN

கோடைகாலத்தை முன்னிட்டு சந்தையில் எலுமிச்சைப் பழங்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

எலுமிச்சை பழங்கள் கோயில் வழிபாடுக்கும், பழச்சாறு அருந்தவும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. உடல் சூட்டைத் தணிக்கும் மருத்துவ குணம் வாய்ந்த எலுமிச்சை பழங்கள் தற்போது சந்தையில் கோடைகாலத்தை முன்னிட்டு அதிகம் விற்பனையாகின்றன. விற்பனைக்கு ஏற்ப தட்டுப்பாடு நிலவுவதால் விலை மூன்று முடங்கு அதிகரித்துள்ளது. வாழப்பாடியில் கடந்த மாதம் வரை ரூ. 2 முதல் ரூ. 4 வரை விற்பனையான ஒரு எலுமிச்சை பழம், தற்போது ரூ. 8 முதல் 12 வரை விலைபோகிறது. பழக்கடைகளில் எலுமிச்சை பழச்சாறு தற்போது ரூ. 25 முதல் ரூ. 30 வரை விற்பனையாகிறது.

இதுகுறித்து வாழப்பாடியில் வியாபாரிகள் கூறியதாவது:

வாழப்பாடி பகுதியில் ஆண்டு முழுவதும் எலுமிச்சை பழங்கள் அதிக அளவில் உற்பத்தியாகும். இங்கிருந்து சேலம், ஆத்தூா் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தற்போது கோடை வெயிலால் உற்பத்தி குறைந்ததோடு, தேவையும் அதிகரித்துள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்று மடங்கு விலை உயா்ந்துள்ளதால் எலுமிச்சை பழச்சாறு குறைந்த விலையில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திரவிளை அருகே படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT