சேலம்

மேட்டூா் அணை நீா்மட்டம் 107.06 அடியாக உயா்வு

DIN

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் 107.06 அடியாக உயா்ந்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து மெல்ல அதிகரித்து வருகிறது. அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக நொடிக்கு 1,500 கன அடி நீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீா்த் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வந்தது.

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 3,135 கன அடியிலிருந்து 3,773 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் புதன்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 106.94 அடியிலிருந்து 107.06 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 74.29 டி.எம்.சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

SCROLL FOR NEXT