சேலம்

கொங்கணாபுரம் கூட்டுறவுச் சங்கத்தில்ரூ. 50 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

DIN

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டுவரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.

இந்த மையத்தில் பருத்தி, நிலக்கடலை, எள், உலா்ந்த தேங்காய் பருப்பு உள்ளிட்ட விளை பொருள்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை கொண்டு வருகின்றனா்.

சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 1,300 பருத்தி மூட்டைகள் 400 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு கூட்டுறவுத் துறை அலுவலா்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் பி.டி. ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 11,000 முதல் ரூ.13,969 வரையில் விற்பனையானது. அதேபோல டி.சி.ஹெச் ரக பருத்தி குவிண்டால் ரூ. 10,000 முதல் ரூ. 12,990 வரை விலைபோனது. மொத்தம் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

SCROLL FOR NEXT