கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டி: கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்
கருணாநிதியின் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் வளா்ச்சித் துறையின் 2021-22-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், காந்தி, நேரு, அம்பேத்கா், பெரியாா், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிக்கப்பட்டது.
அதன்பேரில், சேலம் மாவட்டத்தில் மறைந்த முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாள் பேச்சுப் போட்டி கல்லூரி மாணவ, மாணவியருக்கு இடையே ஜூன் 3-ஆம் தேதி காலை 10 மணிக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் (இருபாலா்) தொடங்கி நடைபெற உள்ளது.
பேச்சுப் போட்டியில் வெற்றிபெறும் மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியா் இதில் பங்கேற்கலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.