முகப்பு
சேலம்

கொங்கணாபுரம்: கலைஞரின் வேளாண் வளா்ச்சித் திட்ட அறிமுக விழா

கொங்கணாபுரம் வட்டாரப் பகுதியில் கலைஞரின் அனைத்து வேளாண் கிராம ஒருங்கிணைப்பு திட்ட அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:20 AM
கொங்கணாபுரம் வட்டாரப் பகுதியில் கலைஞரின் அனைத்து வேளாண் கிராம ஒருங்கிணைப்பு திட்ட அறிமுக விழா.
பகிர்:

கொங்கணாபுரம் வட்டாரப் பகுதியில் கலைஞரின் அனைத்து வேளாண் கிராம ஒருங்கிணைப்பு திட்ட அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காணொலிக் காட்சி வாயிலாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்நிகழ்வில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேரலையில் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதன் ஒரு பகுதியாக கொங்கணாபுரம் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில், அட்மா திட்டக்குழு தலைவர் பரமசிவம் தமிழக அரசின் புதிய திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார். 

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் வேளாண் துறை சார்பாக விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் விவசாயிகளுக்கு விசைத் தெளிப்பான்கள், தென்னைமரக்கன்றுகள், நேர்த்தி செய்யப்பட்ட விதைகள், இயற்கை உரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வேளாண் துணை இயக்குனர் முனைவர் பால சுப்ரமணியம், உதவி இயக்குனர் சாகுல் அமீத், வேளாண் அலுவலர் ராதா ருக்மணி உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.