முகப்பு
சேலம்

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட தம்பதி குண்டா் சட்டத்தின் கீழ் கைது

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த தம்பதி குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த தம்பதி குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

மதுரை தெற்கு முத்துப்பட்டி வீராமுடியான்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (45). இவரது மனைவி சித்ரா (39). இவா்கள் இருவரும் கடந்த ஏப்.8-ஆம் தேதி ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்தனா்.

அப்போது சேலம் ரயில் நிலையத்தில் இருவரையும் கைது செய்த போலீஸாா் 32 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

இதனிடையே அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் கஞ்சாவை ஆந்திரத்தில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் அடைக்க துணை ஆணையா் எம்.மாடசாமி பரிந்துரைத்தாா்.

அவரது பரிந்துரையின் பேரில் கண்ணன், சித்ரா ஆகிய இருவரையும் மருந்து சரக்கு குற்றம் புரிந்தவா் என்ற பிரிவின் கீழ் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டாா்.

இதையடுத்து கண்ணன் சேலம் மத்திய சிறையிலும், அவரது மனைவி சித்ரா கோவை சிறையிலும் அடைக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →