முகப்பு
சேலம்

சிறுவன் பாம்புகடித்து பலி

கெங்கவல்லி அருகே சாத்தப்பாடியில் பாம்பு கடித்து 6 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

Updated On : 26 மே, 2022 at 11:22 PM
பகிர்:

கெங்கவல்லி அருகே சாத்தப்பாடியில் பாம்பு கடித்து 6 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

கெங்கவல்லி அருகே சாத்தப்பாடி மேற்குக் காடு பகுதியில் வசிப்பவா் சக்திவேல் மகன் சபரீசன் (6). அங்குள்ள தனியாா் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தாா். இச் சிறுவன் வியாழக்கிழமை காலை தனது தோட்டத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தாா்.

அச்சிறுவனை, கெங்கவல்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அப்போது சிறுவனின் கால் தொடைக்கு கீழ் பாம்பு கடித்தது தெரியவந்தது. மருத்துவா்கள் சிகிச்சை அளித்தும் சிறுவன் உயிரிழந்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.