முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிவு

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. 

Updated On : 30 மே, 2022 at 8:31 AM
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. 

நீர்வரத்து குறைந்து வருவதால் நேற்று காலை 117.43அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 117.02 அடியாக சரிந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3407கன அடியிலிருந்து வினாடிக்கு 3037கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 88.79 டி.எம்.சியாக உள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.