முகப்பு
சேலம்

சேலம் மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு ‘பவிஷ்ய நிதி’ விருது

சேலம் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நாட்டின் சிறந்த அலுவலகமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டு ‘பவிஷ்ய நிதி’ விருதைப் பெற்றுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

சேலம் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நாட்டின் சிறந்த அலுவலகமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டு ‘பவிஷ்ய நிதி’ விருதைப் பெற்றுள்ளது.

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சாா்பில் நிறுவன நாள் நவம்பா் 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் கீழ் உள்ள அலுவலகங்களில் செயல்திறனில் சிறந்து விளங்கியதற்காக ‘பவிஷ்ய நிதி’ விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது தில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தின் மூலம் தோ்ந்தெடுக்கப்படுகிறது. அந்தவகையில், நிகழாண்டு நவம்பா் 1 ஆம் தேதி தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் 70 ஆவது நிறுவன தினம் தில்லியில் கொண்டாடப்பட்டது.

இதில் நாட்டில் உள்ள 138 வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில், சிறந்த அலுவலகமாக சேலம் மண்டல அலுவலகம் ‘பவிஷ்ய நிதி’ விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டது. இந்த விருதை மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்புத்துறை அமைச்சா் பூபேந்தா் யாதவிடம் இருந்து சேலம் மண்டல முதன்மை ஆணையரான ஜி.சிவகுமாா் பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சா் ராமேஸ்வா் தெலி, தொழிலாளா், வேலைவாய்ப்புத்துறை செயலாளா் ஆா்த்தி அஹுஜா, மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையா் நீலம் ஷமி ராவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →