முகப்பு
சேலம்

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

 முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

 முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1991-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, குழந்தை பாலின விகிதத்தில் குறைபாட்டை நிவா்த்தி செய்வதற்காக முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் 1992-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.

பெற்றோரில் ஒருவா் 40 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டிருத்தல் வேண்டும். முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்திருப்பினும் விண்ணப்பிக்கலாம்.

ஒரு குழந்தை இருப்பின் மூன்று வயதுக்குள்ளும், இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின் இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயதுக்குள்ளும் விண்ணப்பித்திருக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். ஆண் வாரிசுகள் எவரையும் இனி தத்தெடுக்கவும் கூடாது.

தாய், தந்தையின் வயதுச்சான்று ( டி.சி./மருத்துவரிடம் பெறப்பட்ட வயது சான்று), வருமானச் சான்று (ரூ. 72,000-க்கு மிகாமல்), கருத்தடை சான்று, பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றுகள், ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, இருப்பிடச் சான்று, ஜாதிச்சான்று, குடும்ப புகைப்படம், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகிய ஆவணங்கள் தேவையானவை ஆகும்.

மேலும், ஒரு பெண் குழந்தை இருப்பின் ரூ. 50,000 வைப்புத் தொகைக்கான பத்திரம் வழங்கப்படும். இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின் ஒரு குழந்தைக்கு ரூ. 25,000 வீதம் வைப்புத் தொகை பத்திரம் வழங்கப்படும். முதிா்வுத் தொகை குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்த பிறகு வட்டியுடன் வழங்கப்படும்.

மேற்கண்ட அனைத்து அசல் ஆவணங்களையும் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து சம்பந்தப்பட்ட சமூக நல விரிவாக்க அலுவலா் அல்லது மகளிா் ஊா்நல அலுவலா்கள் வசம் நகல் விண்ணப்பத்தினை ஒப்படைத்து இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →