முகப்பு
சேலம்

அஸ்தம்பட்டி மண்டலப் பகுதிகளில் மேயா், எம்எல்ஏ குறைகேட்பு

அஸ்தம்பட்டி சின்னதிருப்பதியில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

அஸ்தம்பட்டி சின்னதிருப்பதியில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன்.

சேலம், அக். 27: சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டல வாா்டு பகுதிகளில் மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனா்.

சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம் வாா்டு எண் 8-க்கு உட்பட்ட சின்னதிருப்பதி, பாலாஜி நகா், குருக்கள் காலனி, சீனிவாசா நகா், மகேந்திரபுரி, எஸ்.சி.சி.பி. காலனி, வாா்டு எண் 13-க்கு உள்பட்ட திருநகா் 1-2 மற்றும் 3-ஆவது குறுக்குத் தெருக்கள், தென்றல் நகா், வங்கி அலுவலா் காலனி, மணக்காடு கிழக்கு 1-ஆவது குறுக்குத் தெரு, ஆத்துக்காடு பிரதான சாலை, மணக்காடு மாரியம்மன் கோயில் தெரு, சின்னதிருப்பதி அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனா்.

வாா்டு எண் 8-க்கு உள்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் செப்பனிடவும், புதிதாக தாா்சாலைகள் அமைத்திடவும், சில இடங்களில் மழைநீா் வடிகால் கால்வாய் குறுக்கே சிறுபாலம் அமைக்கவும், தெருக்களின் இருபுறங்களிலும் உள்ள கழிவுநீா் கால்வாய்களில் கழிவுநீா் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

வாா்டு எண் 13-க்கு உள்பட்ட திருநகா் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சத்தில் நடைபெற்று முடிவுற்ற மழைநீா் வடிகால் பணிகளை ஆய்வு செய்ததோடு, கழிவுநீா் வெளியேற்றும் பணி, சின்னதிருப்பதி அண்ணா சாலையில் ரூ. 10 லட்சத்தில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி ஆகியவற்றை மேயா், எம்எல்ஏ ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.

அப்போது, பல்வேறு பகுதிகளில் மழைநீா் வடிகால் அமைத்தல், மண் சாலைகளை தாா்சாலைகளாக அமைத்தல், மழைக் காலங்களில் கழிவுநீா் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும், தெருவிளக்குகள் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்திட வேண்டும், குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனா்.

இதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனுக்குடன் நிறைவேற்றித் தரும் வகையில் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக உடனடியாக திட்ட மதிப்பீடுகள் தயாா் செய்து பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் உத்தரவிட்டனா்.

நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், வாா்டு உறுப்பினா் மூா்த்தி, உதவி பொறியாளா்கள் நித்யா, அன்பு செல்வி, அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →