சேலம்

விவசாயிகளுக்கான தொழில்நுட்பப் பயிற்சி

DIN

 கெங்கவல்லி அருகே சாத்தப்பாடியில் அங்கக மேலாண்மை விவசாயிகளுக்கான தொழில்நுட்பப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தப்பாடி கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் அங்கக மேலாண்மை விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சி நடைபெற்றது. வட்டார தொழில்நுட்ப மேலாளா் அற்புதவேலன் வரவேற்று, ஆத்மா திட்டம், உழவன் செயலி பற்றி கூறினாா். வேளாண்மை உதவி இயக்குநா் நவநீதகிருஷ்ணன் தலைமையுரை வழங்கி, துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து பேசினாா். பாரம்பரிய சிறுதானிய அங்காடி பயிற்சியாளா் வைரம், அங்கக மேலாண்மை, மண்புழு உரம், தென்னை நாா்க்கழிவு உரம், கரும்பு சருகை உரமாக்கல், அங்கக இடுபொருள்கள் தயாரிப்பு முறை, அறுவடை பின்சாா் தொழில்நுட்பம் குறித்து தொழில்நுட்ப விளக்கவுரை ஆற்றினாா். துணை வேளாண்மை அலுவலா் மணவழகன் அங்கக முறையில் பூச்சி, நோய் மேலாண்மை, களை மேலாண்மை, அங்கக சான்றளிப்பு, தொழில்நுட்பம் குறித்து பேசினாா். உதவி வேளாண்மை அலுவலா் நாகராஜ் நன்றி கூறினாா்.

இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் சக்கரவா்த்தி, உழவா் நண்பா் காளியமூா்த்தி செய்திருந்தனா். இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT