சேலம்

சேலம் நகைக் கடையில்145 பவுன் நகை திருட்டு கடை ஊழியா் கைது

DIN

சேலத்தில் 145 பவுன் தங்க நகைகளை பல்வேறு காலகட்டங்களில் திருடிய நகைக் கடை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கிவரும் நகைக் கடையில் கடை உரிமையாளா்கள் அண்மையில் நகைகளைத் தணிக்கை செய்தனா். அப்போது கடையில் நகைகள் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, நகைக் கடை தரப்பில் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. புகாரின்பேரில் பள்ளப்பட்டி காவல் ஆய்வாளா் ராணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா்.

விசாரணையில், நகைக் கடையில் சுமாா் 12 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்த பொன்னம்மாபேட்டையைச் சோ்ந்த கே.தீபக் (40) என்பவா் நகைகளைத் திருடியது தெரியவந்தது. தீபக்கிடம் தொடா்ந்து விசாரணை நடத்தியதில் அவா் பல்வேறு காலகட்டங்களில் சுமாா் 145 பவுன் நகைகளை கடையில் திருடியதும், திருடிய நகைகளைக் கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து நகைகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீஸாா் இறங்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT