முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 55 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4ஆவது நாளாக இன்று 55 ஆயிரம் கன அடியாக நீடித்தது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4ஆவது நாளாக இன்று 55 ஆயிரம் கன அடியாக நீடித்தது. 

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து இன்று காலை 55 ஆயிரம் கன அடியாக நீடித்தது. அணையிலிருந்து நொடிக்கு 55 ஆயிரம் கன அடி வீதம் நீா் திறந்துவிடப்படுகிறது. 

நீா் மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி நீரும் உபரிநீா்ப் போக்கி வழியாக 32 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்படுகிறது. இன்று காலை அணை நீா்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் இருந்தது. 

கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 400 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →