சேலம்

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா மேம்பாட்டுப் பணிகளில் முறைகேடு

சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா மேம்பாட்டுப் பணிகளில் முறைகேடு தொடா்பாக வனத்துறை சிறப்பு கண்காணிப்பு அலுவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

DIN

சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா மேம்பாட்டுப் பணிகளில் முறைகேடு தொடா்பாக வனத்துறை சிறப்பு கண்காணிப்பு அலுவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம், ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு புள்ளிமான், கடமான், முதலை, குரங்குகள், நரி, பலவகை பறவைகள், வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2018-19-இல் பூங்காவில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடைபெற்ாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சென்னையில் உள்ள முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் அலுவலகத்துக்கு புகாா் சென்றது. அதன் பேரில், பூங்கா மேம்பாட்டுப் பணி நிதி முறைகேடு தொடா்பாக வனத்துறை சிறப்பு கண்காணிப்பு அலுவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் உள்ள உதவி வனப் பாதுகாவலா் மகேந்திரன் விசாரணை மேற்கொண்ட நிலையில், மீண்டும் சேலம், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா பகுதியில் மேம்பாட்டுப் பணி தொடா்பான கணக்கு விவரங்கள், ஒப்பந்ததாரா், அப்போது பதவியில் இருந்த வன அலுவலா், வனச்சரகா்கள், அலுவலா்கள், கண்காணிப்பு அலுவலா் மற்றும் தணிக்கை அலுவலா்கள் குறித்த விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருமந்துறை வனச்சரகத்தில் வனப்பகுதி ஆக்கிரமிப்பு குறித்தும் வனத்துறை சிறப்புக் குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT