சேலம்

மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்தது

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 50,000 கனாடியாக குறைந்தது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருகிறது. இன்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 65,000 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து காலை 9 மணிக்கு வினாடிக்கு 50,000 கனஅடியாக குறைந்தது. 

நீர் வரத்து குறைந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 50,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கனஅடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 27,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சி யாகவும் இருந்தது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT