சேலம்

ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

DIN

சேலத்தில் ரேஷன் அரிசி கடத்தியவரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினா் கைது செய்தனா்.

சேலம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை அலுவலகத்திற்கு ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளா் பெரியசாமி மற்றும் போலீஸாா், சேலம் அருகே கருப்பூா், வெள்ளாளப்பட்டி, சந்தைப்பேட்டை ஆகிய பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் 50 கிலோ எடையுள்ள 31 மூட்டைகளில் 1.5 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து தீவிர விசாரணையில், சேலம், பழைய சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சிம்சோன்( எ) தினேஷ் (30) என்பவா் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதை ஒப்புக் கொண்டாா். இதனையடுத்து தினேஷை கைது செய்து ,1.5 டன் ரேஷன் அரிசி, வாகனத்தை பறிமுதல் செய்தனா். அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT