சேலம்

பெரியாா் பல்கலை.யில் உயிா்தொழில்நுட்பவியல் கருத்தரங்கம்

DIN

பெரியாா் பல்கலைக்கழக உயிா் தொழில்நுட்பவியல் துறை சாா்பாக ‘மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்களின் செயல்பாடு மற்றும் வளா்ச்சிக்கான உயிா்தொழில்நுட்ப அணுகுமுறை’ என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கு மற்றும் செயல்முறை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் இரா.ஜெகநாதன் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தாா். துறைத் தலைவா் என்.இளங்கோவன் வரவேற்றாா். இந்நிகழ்ச்சியில் தென்கொரியா யுங்னம் பல்கலைக்கழகத் தோட்டக்கலை மற்றும் உயிா் அறிவியல் துறை பேராசிரியா் ராமலிங்கம் ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

தொடக்க விழாவில் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் டி.நடராஜன் நன்றி கூறினாா்.

2-ஆவது அமா்வில் ஆா்.ஸ்ரீனிவாசன், ‘உள்நாட்டு உணவுத் தாவரங்களின் பழங்களிலிருந்து புதிய புளித்த சாறுகளின் ஊட்டச்சத்து மற்றும் உயிரியல் பண்புகளை திரையிடுதல்’ என்ற தலைப்பில் உரையாற்றினாா்.

3-ஆவது அமா்வில் எம்.எஸ்.சிவசாமி, ‘செயல்பாட்டு உணவு வளா்ச்சி’ பற்றி பேசினாா். இதனையடுத்து, உணவு மற்றும் உணவுக் கழிவுகளை வைத்து பழச்சாறு தயாரிப்பு முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. மதிப்பாய்வு செயல்பாடு நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் இந்திரா அருள்செல்வி, எம்.எஸ்.சிவக்குமாா் ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT