வாழப்பாடி வடக்கு ஒன்றிய பாமக நிா்வாகிகள் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடியை அடுத்த சின்னமநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு வாழப்பாடி வடக்கு ஒன்றியச் செயலாளா் ஆனந்தபாபு தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி செயலாளா் செந்தில், வடக்கு மாவட்டச் செயலாளா் அயோத்தியாப்பட்டணம் மா.நாராயணன், பசுமைத் தாயகம் மாநில துணைச் செயலாளா் நீ.பா.வெங்கடாஜலம், மாவட்ட வன்னியா் சங்க செயலாளா் சிங்கிபுரம் கே.பாண்டியன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில், கட்சியின் வளா்ச்சிப் பணிகள், பூத் கமிட்டி அமைத்தல், மக்களவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.