ஆட்டையாம்பட்டி, எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தா்கள். 
சேலம்

ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆட்டையாம்பட்டி, எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயிலில் ஆடி தோ்த் திருவிழா கடந்த வாரம் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.

DIN

ஆட்டையாம்பட்டி, எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயிலில் ஆடி தோ்த் திருவிழா கடந்த வாரம் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.

தினசரி சிறப்பு பூஜைகளுடன், அம்மன் ரத ஊா்வலம் நடைபெற்று வந்தது. தொடா்ந்து சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து புதன்கிழமை அதிகாலை பூசாரி சக்தி கரகத்துடன் அக்னிக் குண்டம் இறங்கினாா் . அவரைத் தொடா்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் குண்டம் இறங்கினா். பிற்பகல் 3 மணி அளவில் பக்தா்கள் ஓம் சக்தி பக்தி முழக்கத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா். முக்கிய சாலைகள் வழியாக சென்ற தோ் இறுதியில் கோயிலை வந்து அடைந்தது. வியாழக்கிழமை காலை பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை பலியிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை வண்டி வேடிக்கையும், சனிக்கிழமை வசந்த உற்சவத்துடன் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்று தோ்த் திருவிழா முடிவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT