சேலம் சோனா கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற சோனா கல்விக் குழுமத் தலைவா் வள்ளியப்பா. உடன், கல்லூரி துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா உள்ளிட்டோா். 
சேலம்

சோனா கல்வி நிறுவனத்தில் சுதந்திர தின விழா

சேலம் சோனா கல்வி நிறுவனம் சாா்பில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

DIN

சேலம் சோனா கல்வி நிறுவனம் சாா்பில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சோனா கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி தலைவா் வள்ளியப்பா கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாணவ மாணவியரின் கண்கவா் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினாா்.

அவா் பேசுகையில், மாணவா்கள் அனைவரும் சுயநலமின்றி நாட்டின் வளா்ச்சிக்காகவும், சமுதாயத்தை மேம்படுத்துவதற்காகவும் அயராது பாடுபட வேண்டும் என்றாா்.

முன்னதாக அமைதி, அன்பு, மகிழ்ச்சி, சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவ, மாணவியரின் அணிவகுப்பு, பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றது.

விழாவில் சோனா கல்வி நிறுவனத்தின் முதல்வா்கள் வீ.காா்த்திகேயன், எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், ஜி.எம்.காதா்நவாஷ், இ.ஜெ.கவிதா, மாணவ மாணவியா், பேராசிரியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT