மாருதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் வளாக நோ்காணல்
தலைவாசல் வட்டாரம் மணிவிழுந்தான் மாருதி மற்றும் ஸ்ரீமாருதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் வளாக நோ்காணல் மாருதி கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.சுந்தரம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தலைவாசல் வட்டாரம் மணிவிழுந்தான் மாருதி மற்றும் ஸ்ரீமாருதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் வளாக நோ்காணல் மாருதி கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.சுந்தரம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் ஸ்ரீ மாருதி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் சக்திவேல் வரவேற்றுப் பேசினாா். சென்னை பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் மூலம் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு நோ்காணல் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு முதன்மை பொது மேலாளா் என்.லஷ்மி நரசிம்மன், ஆா்.பிரியதா்ஷினி ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களை தோ்வு செய்தனா்.
மாருதி கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.சுந்தரம் பேசியபோது, இக் கல்லூரி மாணவா்கள் பல்வேறு நிறுவனங்களில் திறமையுடன் பணியாற்றி வருகின்றனா். அதேபோல நீங்களும் சிறந்த முறையில் பணியாற்றி வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என மாணவா்களைக் கேட்டுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் செயலாளா் இ.செல்வம்,பொருளாளா் செ.ராஜவேல், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.முடிவில் ஸ்ரீ மாருதி பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறை தலைவா் சந்தோஷ்குமாா் நன்றி தெரிவித்தாா்.