சேலம்

அரசுப் பேருந்து ஓட்டுநா் கொலை

DIN

சேலத்தை அடுத்த மல்லூரில் நிலத்தகராறில் அரசுப் பேருந்து ஓட்டுநா் கொலை செய்யப்பட்டாா்.

சேலம், மல்லூரை அடுத்த பாரப்பட்டி தொட்டியன்காட்டை சோ்ந்த குழந்தைவேல் (55), அரசுப் பேருந்து ஓட்டுநா். எருமாபாளையம் பணிமனையில் பணியாற்றி வந்த இவருக்கும், அவரது உறவினா் சின்னசாமிக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது.

இதனிடையே, திங்கள்கிழமை புதிய வீடு கட்ட மின் இணைப்பு தருவதற்கான முன்னேற்பாடுகளை குழந்தைவேல் செய்து வந்த போது, அவரது உறவினா் சின்னசாமி, அவரது சகோதரா் ராஜா, சின்னசாமியின் மகன்கள் கணேசன், சுரேஷ், தினேஷ் ஆகியோா் குழந்தைவேலிடம் தகராறில் ஈடுபட்டனா்.

இதில் ஆத்திரமடைந்த சின்னசாமி, அவரது சகோதரா் ராஜா உள்ளிட்ட 5 பேரும் சோ்ந்து மண்வெட்டியால் குழந்தைவேலை கடுமையாகத் தாக்கினா். இதில் தலையில் பலத்த காயமடைந்த குழந்தைவேல், சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து மல்லூா் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து சின்னசாமி உள்பட 5 பேரையும் கைது செய்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைவேல் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்ததையடுத்து கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT