சேலம்

அர.குள்ளம்பட்டி பத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி குள்ளம்பட்டி, ஏரிக்கரை பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரசிராமணி குள்ளம்பட்டி ஏரிக்கரை பகுதியில் உள்ள விநாயகா், பத்ரகாளியம்மன், மாரியம்மன், முனியப்பன், கன்னிமாா் கோயில் குடமுழுக்கு விழாவினையொட்டி, வியாழக்கிழமை விநாயகா் பூஜையுடன் முதல்கட்ட யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. அதனையடுத்து கோனேரிப்பட்டி காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வந்து கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்று கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. பின்னா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு விழாக் குழுவினா் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT