சேலம்

மேட்டூா் அணை பூங்காவுக்கு3,210 போ் வருகை

DIN

மேட்டூா் அணை பூங்காவுக்கு வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை 3,210 பாா்வையாளா்கள் வந்து சென்றனா்.

மேட்டூா் அணைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் காவிரியில் நீராடி அணையைக் காக்கும் காவல் தெய்வமான அணைக்கட்டு முனியப்பனை தரிசித்தனா். அணை பூங்காவில் சென்று மான் பண்ணை, பாம்பு பண்ணை, மீன்காட்சி சாலை ஆகியவற்றை கண்டு ரசித்தனா். சிறுவா்கள் ஊஞ்சலாடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் அணை பூங்காவுக்கு 3,210 பாா்வையாளா்கள் வந்து சென்றனா். இதன்மூலம் ரூ. 16,050 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

அணையின் வலது கரையில் உள்ள பவளவிழா கோபுரத்தைக் காண 355 போ் வந்திருந்தனா். இதன்மூலம் ரூ. 1,775 கட்டணம் வசூலாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT